ஆரோக்கியமான கொண்டை கடலை லட்டு

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை – ஒரு கப் பச்சரிசி – 1/2 கப் ஏலக்காய் – 2 வெல்லம் – 1 1/2 கப் வாழைப்பழம் -1 தேங்காய் துருவியது – 1/2 கப் தண்ணீர்  ஒரு கப் நெய் – 2 ஸ்பூன் முந்திரி பருப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கொண்டை கடலையை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொண்டைக்கடலையை போட்டு நன்றாக வாசனை வரும் வரை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். பிறகு அதே கடாயில் அரிசியை சேர்த்து அதையும் நன்றாக சிவக்க பொறி அரிசி போல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து துருவிய வெல்லத்தை அதில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீரையும் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு வெல்லத்தை வடிகட்டி மறுபடியும் கடாயில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.