மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிப் பயனாளிகள் பாராட்டினர்
213 தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்கள் ஆக்கிய புரட்சிகரமான சாதனைமற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திகளுக்கான கடனுதவி ஆணைகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிப் பயனாளிகள் பாராட்டினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான புரட்சிகரமான நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவி ஆணைகளை வழங்கினார்கள்.