சென்னையில் இன்று அரசு ஒப்பந்ததாரர்
கரூர் செல்வராஜூக்கு சொந்தமான இடங்களில் சோதனை
நடைபெற்றுவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் சோதனை நடந்துவருகிறது.
யார் இந்த ஆதவ் அர்ஜுனா?: விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்டவர் ஆதவ் அர்ஜூனா. தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தலைவரான அவர், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். சில வாரங்களில் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.