பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். ஆனால் இரவு நேரத்தில் பழங்கள் சாப்பிடக் கூடாது.
பழங்கள் சாப்பிடுவதற்கு சரியான நேரம் பகல் தான். குறிப்பாக காலை நேரத்திலும் மதிய உணவுக்கு முன்பாகவும் சாப்பிடுவது தான் சிறந்த நேரமாக இருக்கும்.
இரவில் பழங்கள் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயரும். தூக்கத்தையும் இது பாதிக்கும்.
மிக எளிமையான உணவாக இருந்தாலும் இட்லி, தோசை போன்றவற்றில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் அதிகமாக இருக்கும்.
நூடுல்ஸ், பாஸ்தா போன்ற ரீஃபைண்ட் செய்யப்பட்ட ஸ்டார்ச் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இது ரத்த குளுக்கோஸ் அளவில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவையும் கட்டுப்படுத்த முடியாது. தூக்கமும் சரியாக இருக்காது.
