ரசிகர்கள் அதிர்ச்சி
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மூன்று நாட்கள் நடந்தது. அதில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பாட்டு பாடி, டான்ஸ் ஆடி விருந்தினர்களை மகிழ்வித்தார்கள். கொண்டாட்டம் முடிந்து அவரவர் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்கள். ஆனாலும் சமூக வலைதளங்களில் இன்னும் அந்த 3 நாட்கள் நடந்த கொண்டாட்டம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் மேடையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் ஷாருக்கானை அங்கிள் என கூறியிருக்கிறார் ராதிகா மெர்சென்ட். ஷாருக்கான் படத்தில் வரும் ரொமான்டிக் வசனம் ஒன்றை ராதிகா பேச, ஆனந்த் அம்பானி சந்தோஷப்பட்டு அவருக்கு முத்தம் கொடுத்தார். அதை பார்த்து ஷாருக்கானும் சந்தோஷப்பட்டார்.