தங்கலான் நல்ல சேதி சொன்ன பா. ரஞ்சித்.!
கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘தங்கலான்’ வெளியீடு குறித்து அசத்தலான தகவல் ஒன்றை கூறியுள்ளார் பா. ரஞ்சித்.
பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படமும் ஒன்று. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் வாயிலாக முதன்முறையாக எஸ்கே, பா. ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ளனர்.எப்போதும் தனது படங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் பா. ரஞ்சித். இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தில் கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றினை பேசும் விதமாக படமாக்கியுள்ளார். அத்துடன் பழங்குடியின மக்களின் வாழ்வியலை ரத்தமும், சதையுமாகவும் இப்படத்தில் பதிவு செய்துள்ளார்