வழக்கறிஞர் தமிழக அரசு
நில மோசடி புகார்கள் / அது தொடர்பான குற்றங்கள் /அதற்குரிய இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code ) சட்டப்பிரிவுகள்.
1.அடுத்தவர் சொத்தைதன்னுடையது என சொல்லி விற்றவருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- ஒருவர் உத்தரவு கொடுக்காமலே கொடுத்துவிட்டதாக ஆவணங்களை தயார் செய்து விற்றவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
- கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ஒருவனது அசல் நிலப் பத்திரத்தை வாங்கி தனது சொத்தென்று சொல்லி விற்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC. 4.ஒருவர் பிழைப்புக்காக சில வருடங்கள் வெளியூர் சென்றிருக்கையில் அவரது இடத்தை தனக்கு சொந்தமாக்கி விட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.
- ஒரு இடத்தை இரண்டு நபர்களிடம் விற்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC.
6.ஒரே வீட்டில் அண்ணனது பத்திரத்தை திருடி, அவரது சொத்தை விற்ற தம்பிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை – U/S 419, 464, 471 IPC.
7.தனது இடத்தில் வீடு கட்டுகையில் பக்கத்தில் உள்ள இன்னொருவனின் இடத்தில் சில அடி தூரங்களை ஆக்கிரமித்துக் கட்டுமானம் செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – U/S 403, 441, 447 IPC.
- தனது இடத்தை விற்ற போது, பக்கத்திலுள்ள இன்னொருவரின் நிலத்தையும் சேர்த்து விற்றவருக்கு
7 ஆண்டுகள் சிறை தண்டனை – U/S 403, 419, 464, 471 IPC.
9.எல்லைக் கல்லைப் பிடுங்கிவிட்டு அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – U/S 403, 441, 447, 489 IPC.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மத்திய அரசு வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.2010/14
விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு வழக்கறிஞர் தமிழக அரசு.