புதிய உச்சத்தை தொட்டம் தங்கம் விலை
மீண்டும் மீண்டும் விலை உயர்வு… புதிய உச்சத்தை தொட்டம் தங்கம் விலை
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.
மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,090க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.