பா.ஜ.க.ஆட்சியில் இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார். விமானம் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைத்தளத்திற்கு சென்றார். அங்கு போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர்
ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாடு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை உலகம் பார்த்திருக்கிறது.
“இப்போது எனது அடுத்த பணி ‘வெட் இன் இந்தியா'(‘Wed in India’). மக்கள் ஜம்மு காஷ்மீர் வந்து தங்கள்
திருமணங்களை நடத்த வேண்டும்.
உங்கள் இதயங்களை வெல்லவே காஷ்மீர் வந்துள்ளேன். பா.ஜ.க. ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர். நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது.