சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து
கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்திற்கு, கடந்த 5 நாட்களில் மட்டும், 20,000 சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், “மஞ்சுமால் பாய்ஸ்” திரைப்படம் படம் பிடிக்கப்பட்டது. தற்போது இந்த திரைப்படம் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் வெளியானதை தொடர்ந்து மற்ற சுற்றுலா தலங்களுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளை விட குணா குகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது