பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்
ஏகாதிசி திதியன்று விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து விரதத்தை தொடங்கி விட வேண்டும். இப்படி விரதம் இருப்பவர்கள் முதல் நாள் இரவே உணவு தவிர்த்து விடுவது நல்லது. இந்த விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருங்கள். அடுத்து அன்றைய தினத்தில் காலையிலே பெருமாள் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து துளசி இலை மாலை கட்டி போட்டு விடுங்கள். மகாலட்சுமி தாயார் படம் இருப்பின் அவருக்கும் இதே போன்று செய்யுங்கள். அதே போல் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக பானகம் கரைத்து வைத்து வழிபாடு செய்யுங்கள். இது அவருக்கு மிகவும் உகந்த நெய்வேத்தியம்.