தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. சென்னை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் 13 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. பெரும்பாக்கத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 9531 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. பெரும்பாக்கத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் போது எடுத்த புகைப்படம். (செய்தியாளர் குமார்)