காவல் நிலையம் கட்டிடம் கட்டுமான பணி
185 லட்சம் மதிப்பில் காவல் நிலையம் கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
சென்னை அடுத்த பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் காவல் நிலையம் அமைப்பதற்காக நகர்ப்புற வாழ்விட மேம்பட்ட வாரியம் 1311 சதுர அடி இடம் ஒதுக்கியது.
காவல் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் 398 சதுர அடியில் காவல் நிலையம் கட்டிடம் கட்டுமான பணி தொடங்குவதற்கு (05/03/2024)பூமி பூஜை. போடப்பட்டது காவல் நிலையத்தின் கட்டுமான பணி 8 மாதங்களில் முடிவடையும். தரைத்தளத்தில் வாகனம் நிறுத்துவதற்காகவும் முதல் தலம் இரண்டாம் தளத்தில் காவல் நிலையமாக செயல்படும் என கூறப்படுகிறது கல்லூரி சாலை, நுங்கம்பாளையம் சாலை, கலங்கரை விளக்க திட்ட குடியிருப்பு பகுதி மத்தியில் இந்த காவல் நிலையம் கட்டிடம் கட்டப்படுகிறது. இவ்விழா செம்மஞ்சேரி சரக உதவி ஆணையர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. செய்தியாளர் குமார்