உடனடி பண தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்
உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஆடுகளுக்கு உங்களால் முடிந்த உணவை வாங்கி சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆட்டுக்குட்டிகளுக்கு உங்கள் கையால் உணவை தானம் செய்தால் உடனடி பண தேவை பூர்த்தி ஆகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகாது. டக்கு டக்குனு கையில் பணம் வந்து நிற்கும். இது பயங்கரமா ஒர்க் அவுட் ஆகுங்க முழு நம்பிக்கையுடன் செஞ்சு பாருங்க. நாளைக்கு அவசர தேவைக்கு கையில் காசு இல்லையே, எப்படி வரும், என்று சிந்திக்கும் போது, 50 ரூபாய்க்கு ஏதாவது சாப்பிடும் பொருளை வாங்கி ஆட்டுக்குட்டிக்கு வச்சிருங்க அவ்வளவுதான் பரிகாரம். கிராமப்புறங்களில் ஆடு சுலபமாக வீட்டு பக்கத்திலேயே இருக்கும். அதற்கு சாப்பிட ஏதாவது ஒரு பொருள் வாங்கி கொடுக்கலாம். நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் என்ன செய்வது. ஆதிசேஷனது படத்தை அடிக்கடி பார்த்து பணம் கையில் தங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கணும். ஆதிசேஷன் என்பவர் பாம்பு.
உங்களுடைய மொபைலில் ஆதிசேஷன் என்று டைப் செய்தாலே இந்த படம் உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த படத்தை டிபியா கொண்டு வந்து உங்க போனில் வைத்துக் கொள்ளுங்கள். ஆதிசேஷனை மனதார நினைத்து எனக்கு பணவரவு வேண்டும். கையில் செலவுக்கு பணம் கிடைக்கணும் என்று மனதார பிரார்த்தனை செய்தால் உங்களுடைய தேவைக்கு ஏற்ப உடனடியாக பண வரவு இருக்கும். இதையெல்லாம் தாண்டி இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது மஞ்சள் நிறத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஆடை அணிவது, மஞ்சள் நிற பூ வைப்பது, சந்தன பொட்டு வைத்துக் கொள்வது, இப்படி மஞ்சள் நிறத்தை அதிகமாக நாம் பயன்படுத்தும் போது குரு பகவானின் அனுதுரகம் கிடைத்து, நமக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கும் அதிகரிக்கும்.