பாஜகவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது

“தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது.

சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. தமிழ்நாடு, சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது.

சென்னை மக்களின் தேவைகளை திமுக பூர்த்திசெய்யவில்லை. திமுகவுக்கு மக்கள் துயரங்களைப் பற்றி கவலையில்லை எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.