172 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 383 ரன் குவிக்க (கிரீன் 174* ரன்), நியூசிலாந்து 179 ரன்னுக்கு சுருண்டது (பிலிப்ஸ் 71, ஹென்றி 42, பிளண்டெல் 33).
204 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. 51.1 ஓவரில் 164 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (லயன் 41, கிரீன் 34, ஹெட் 29, கவாஜா 28). நியூசி. தரப்பில் பிலிப்ஸ் 5 விக்கெட் அள்ளினார். இதைத் தொடர்ந்து, 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்தது. ரச்சின் ரவிந்திரா 56 ரன், டேரில் மிட்செல் 12 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரச்சின் 59, பிளண்டெல் 0, பிலிப்ஸ் 7 ரன் எடுத்து லயன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 128 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.
* டெஸ்ட் போட்டிகளில் லயன் 24வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் கைப்பற்றும் 10வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் லயனுக்கு கிடைத்துள்ளது.
* டெஸ்ட் வரலாற்றில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலிலும் லயன் முதலிடம் வகிக்கிறார். அவர் இதுவரை 128 டெஸ்டில் 1501 ரன் (அதிகம் 47, சராசரி 12.72) எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் கெமார் ரோச் 81 டெஸ்டில் 1174 ரன் குவித்து (அதிகம் 41, சராசரி 11.50) 2வது இடத்தில் உள்ளார்.
* ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 6வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. 2000ல் இருந்து நியூசி. சென்று விளையாடிய 11 டெஸ்டில் ஆஸி. 10ல் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.