வாரணாசியில் தமன்னா படப்பிடிப்பு
மது கிரியேஷன்ஸ், சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து உருவாக்கும் ’ஒடேலா 2’ என்ற பான் இந்தியா படத்தை அசோக் தேஜா இயக்கு கிறார். இதில் தமன்னா, ஹெபா பட்டேல், வசிஷ்டா என்.சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால், பூஜா ரெட்டி நடிக்கின்றனர். தற்போது வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த 2022ல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ என்ற கிரைம் திரில்லர் படத்தை அசோக் தேஜா இயக்க, சம்பத் நந்தி எழுதியிருந்தார். தற்போது சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் ’ஒடேலா 2’ என்ற படத்தை டி.மது தயாரிக்கிறார்.