மேலும் 3 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் 3 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தாண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாகாணமாக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.இரண்டாவது இடத்தில் முன்னாள் ஐநா தூதரும்,முன்னாள் தெற்கு கரோலினா ஆளுநருமான நிக்கி ஹாலே உள்ளார்.
நியூ ஹாம்ப்ஷையர், அயோவா ஆகிய மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் நிக்கி ஹாலேயின் சொந்த மாகாணமான தெற்கு கரோலினாவில் வாக்களிப்பு நடைபெற்றது. இதிலும் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். எதிரணியின் சொந்த மாகாணத்திலேயே வெற்றி பெற்றது அவரது வலுவான நிலையை நிரூபிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,மிச்சிகன், மிசோரி,இடாஹோ ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பிலும் டிரம்ப் வெற்றி பெற்றார்.