பிரதமர் வருகை எதிரொலி

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 வெடிகுண்டு சோதனை குழுக்கள், 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோர காவல்படை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்ல தடை விதிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு என மீனவர்கள் வேதனை கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.