பிரட் உப்புமா செய்முறை
தேவையான பொருட்கள் பிரட் – 6 துண்டுகள் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் முந்திரி – 5 கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 இஞ்சி – ஒரு இன்ச் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் சர்க்கரை – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு எலுமிச்சை பழம் – 2
செய்முறை பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். பருப்பு நிறம் மாறியதும் அதில் கருவேப்பிலையை சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக சிவக்க வதங்கிய பிறகு பச்சை மிளகாய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து வெங்காயத்துடன் சேர்க்க வேண்டும். இஞ்சியை பொடியாக நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும்.
ப்பொழுது பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியின் பச்சை வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும். பிறகு சிறிதளவு மட்டும் உப்பு சேர்க்க வேண்டும். பிரட்டில் உப்பு இருக்கும் என்பதால் குறைந்த அளவே உப்பை சேர்க்க வேண்டும். பிறகு இதில் மஞ்சள் தூள், சர்க்கரை இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு நாம் நறுக்கி வைத்திருக்கும் பிரட் துண்டுகளை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதற்கு மேல் கொத்தமல்லி தலையை தூவி இரண்டு எலுமிச்சை பழங்களில் இருந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் ஊற்றி அதையும் நன்றாக கிளற வேண்டும். பிறகு இரண்டு கைப்பிடி அளவு தண்ணீரை பிரட்டில் தெளித்து நன்றாக ஒரு நிமிடம் வரை கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.