பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ம் தேதி பொதுதேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 265 இடங்களில் 133 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களிலும், வௌியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சுயேட்சை உறுப்பினர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெறவில்லை.
இதையடுத்து ஷெபாஸ் ஷெரீஃப் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய ஷெபாஸ், “ காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் விடுதலைக்காக ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்றும்” என்றார்.