நீதிமன்றம் எச்சரிக்கை.

டார்லிங் என்றால் சிறை தான்: நீதிமன்றம் எச்சரிக்கை.

முன்பின் தெரியாத பெண்களை டார்லிங் என கூப்பிடுவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது. சிறை தண்டனை விதிக்கலாம் என கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தமானில் கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். குடிபோதையில் அங்கு நின்று கொண்டிருந்த ஜானக் ராம் டார்லிங் என அழைத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் ஜானக் ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜானக் ராமுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து, கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் ஜானக் ராம் மனு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்” முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறை தண்டனை விதிக்கலாம்” என உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.