திரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
மார்ச் 4: ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ், சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெராடி, சுரேஷ் மேனன் நடிப்பில் உருவாகும் படம், ‘வளையம்’. ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்க, மனோபாரதி இயக்குகிறார். இதற்கு முன்பு மனோபாரதி பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.
படம் குறித்து ஜி.டில்லி பாபு கூறுகையில், ‘சமூகத்துக்கு தேவையான தரமான படங்களையும், பொழுதுபோக்கு கதைகளையும் ரசிகர்கள் வரவேற்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் பயணித்து வருகிறோம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆர்.வேல்ராஜ் உதவியாளர் மகேந்திரா எம்.ஹென்றி ஒளிப்பதிவு செய்ய, மைக்கேல் பிரிட்டோ இசை அமைக்கிறார். திரில்லர் கதையுடன் உருவாகி வருகிறது’ என்றார்.