திமுக ஆட்சியை உருவாக்கியது சிறுபான்மை சமூக மக்கள்தான்
திருச்சி, மார்ச் 4: திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்ட நுழைவாயில், முதல்வர் தே.சுவாமிராஜ் வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட தேர்வு நெறியாளர் அலுவலகம், தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறை வளாகம், புதிய கூடைப்பந்து மைதானம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கல்லூரி அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருமண்டல- பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி பேராயர் ரோசலிண்ட் சந்திரசேகரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் வரவேற்றார். விழாவில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது: தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரி மேலும் மேலும் பல புகழ் அடைய வேண்டும். கல்லூரி புகழ் அடைவதோடு இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளிம்பு நிலையில் உள்ள நடுத்தர மக்கள் அவர்களை முன்னேற்றுவதற்கு சரியான ஒரு இடமாக இந்த கல்லூரி திகழ்கிறது.
மேலும் சர்வதேச மற்றும் மத்திய, மாநில அளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். மேலும் தேசிய அளவில் விருது பெற்ற திருச்சி-தஞ்சை மண்டலத்திலுள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசுசீகரன் மற்றும் பள்ளி ஆசிரியர் பியூலா மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.