தம்பரம் கோயில் கட்டுமானங்களில் விதிமீறல்
சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டுமானங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு நடத்தியதில் விதிமீறல் நடந்தது தெரிய வந்துள்ளது. சிதம்பரம் கோயிலின் 2 பிரகாரங்களில் 100 அறைகள் கட்டப்படுவதாக தீட்சிதர் தொடர்ந்த வழக்கு மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அமர்வில் உள்ள மற்றொரு வழக்கில் கட்டுமானம் மேற்கொள்ளப்படாது என்று தீட்சிதர்கள் உறுதி அளித்துள்ளனர்.