சுரைக்காய் குருமா செய்முறை

தேவையான பொருட்கள் சுரைக்காய் – 300 கிராம் தேங்காய் துருவல் – 1/4 கப், சோம்பு – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பல் இஞ்சி – 1 இன்ச் பச்சை மிளகாய்  3 வெங்காயம் – 1 தக்காளி – 1 கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் சுரைக்காய், வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவை மூன்றையும் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் எண்ணையில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கி கரைந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இதில் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும். குக்கரில் இரண்டு விசில் வந்த பிறகு குக்கரை ஆப் செய்து விடலாம். இப்பொழுது நாம் தனியாக வதக்கி வைத்திருக்கும் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல், சோம்பு இவற்றையும் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் விசில் போன பிறகு குக்கரை திறந்து அதில் இருக்கும் சுரைக்காயை கரண்டியை வைத்து முடிந்த அளவிற்கு நன்றாக மசித்துவிட்டு கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து குருமாவின் பதத்திற்கு ஏற்றார் போல் தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்ட பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை அதில் தூவி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் எல்லா விதமான சாதத்திற்கும் டிபன் ஐட்டத்திற்கும் உதவக்கூடிய ஒரு ஆரோக்கியமான சுரைக்காய் குருமா தயாராகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.