கலைகளில் சிறந்து விளங்க மந்திரம்

பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்க வேண்டிய சூழ்நிலையில்தான் அனைவரும் இருக்கிறோம். இருப்பினும் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்ற அவ்வை பாட்டியின் சொல்லுக்கு இணங்க நாம் எவ்வளவுதான் படித்து தேறினாலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாகவே இந்த உலகத்தில் இருக்கிறது. அப்படி நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அறிவை என்றும் நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் எந்த மந்திரத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். எந்த ஒரு தொழிலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்தத் தொழிலுக்குரிய அறிவை நாம் பெற வேண்டும். எந்த ஒரு கலையை நாம் கற்க வேண்டும் என்றாலும் அந்த கலைக்குரிய அறிவை நாம் பெற வேண்டும். இப்படி எந்த ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த செயலுக்குரிய அறிவு நமக்கு இருந்தால்தான் அந்த செயலை நம்மால் செம்மையாக செய்து முடிக்க முடியும். அந்த அறிவை தரக்கூடிய ஆற்றல் மிகுந்த தெய்வமாக தான் சரஸ்வதி தேவி விளங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.