கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்
கடன் தீர்க்கும் பரிகாரம்
செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வரக்கூடிய செவ்வாய் ஹோரை நேரத்தில், செவ்வாய் கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும். பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். புதிய பூக்களை சுவாமிக்கு போட்டு விடுங்கள். ஒரு தாம்பூல தட்டு எடுத்துக்கோங்க. அதன் மேலே அட்சதை பரப்பி விட வேண்டும்.
பச்சரிசியில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் நெய் விட்டு, கலந்தால் அட்சதை தயார். ஒரு கைப்பிடி பச்சரிசியில், அட்சதையை தயார் செய்து அந்த தாம்பூல தட்டி மேல் பரப்பி விட்டு அதன் மேலே கொஞ்சம் பெரிய சைஸ் இருக்கும் மண் அகல் விளக்கை வைத்து, சுத்தமான பசு நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
ஒரு வெள்ளை காகிதத்தில் நடுவில் மஞ்சள் பொட்டு ஒன்று வைத்து விடுங்கள். அந்த காகிதத்தின் மேலே நீங்கள் யாருக்கு பணத்தை திருப்பி கொடுக்கணும். அந்த நபரின் பெயர், எவ்வளவு திருப்பி கொடுக்கணும், அந்த தொகையை எழுதிருங்க. இந்த பேப்பரை அந்த தட்டுக்கு கீழே வைக்கணும்.
விளக்கு ஏற்றி விட்டு லேசாக அந்த தட்டை தூக்கி, அதற்கு கீழே இந்த பேப்பரை வச்சிருங்க போதும். அவ்வளவுதான், வழிபாட்டை முடித்துவிட்டு, மறுநாள் இந்த பேப்பரை நெருப்பில் எரித்து தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை கீழே ஊத்திடுங்க. இந்த விளக்கு வடக்கு பார்த்தவாறு எரிய வேண்டும். அட்சதியாக பயன்படுத்திய அரிசியை அரைத்து எறும்புகளுக்கு போட்டு விடுங்கள்.
உங்கள் கடன் பிரச்சனை தீரும்வரை, வரக்கூடிய செவ்வாய் கிழமையில், செவ்வாய் ஹோரை நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முடிந்தால் அந்த செவ்வாய் ஹோரை முடியும் வரை 1 மணி நேரம் அந்த விளக்கு முன்பு அமர்ந்து மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். பிறகு கடனை திருப்பி கொடுக்கக்கூடிய முயற்சியில் ஈடுபடுங்கள். எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். உங்களுடைய செல்வ வளம் தானாக உயர தொடங்கும்.