எள்ளு சாதம் செய்முறை

அந்த அனைத்து விதமான நன்மைகளையும் எள்ளிலிருந்து நம்மால் பெற முடியும். வளரும் குழந்தைகள் எள்ளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் எலும்புகள் வலுப்பெறும். மேலும் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்தும் இதில் அதிக அளவு இருக்கிறது.

தேவையான பொருட்கள் வடித்த சாதம் – ஒரு கப் கருப்பு எள் – 3 டேபிள் ஸ்பூன் உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் – 7 கருவேப்பிலை – 3 கொத்து பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் வடித்த சாதத்தை நன்றாக ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் உளுந்தை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். உளுந்தை வருத்தப்பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். பிறகு ஐந்து வரமிளகாயை போட்டு வறுத்து அந்த உளுந்துடன் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு எள்ளை அதில் சேர்த்து எள்ளு நன்றாக பொரிந்ததும் அதையும் எடுத்து உளுந்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு கொத்து கருவேப்பிலையையும் சேர்த்து அதன் ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுத்து அதையும் உளுந்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக பெருங்காயத்தூளையும் எள்ளு பொடிக்கு தேவையான உப்பையும் சேர்த்து லேசாக வருத்தப்பிறகு அதையும் எடுத்து உளுந்துடன் சேர்த்து ஆற வைத்து விட வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விட்டு விட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.