அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்
காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வலியுறுத்தி உள்ளார். மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவிசெய்ய உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கமலா ஹாரிஸ் வலியுறுத்தி உள்ளார்.
இஸ்ரேல் மீது காசாவில் இருந்து கடந்த அக்.7ம் தேதி ஹமாஸ் அமைப்பு போர் நடத்தியது. அந்த போரில் 1,400 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதல் நடத்தியது. இதில் காசாவில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.