அகத்திக்கீரை உசிலி
சுத்தம் செய்து அரிந்த
அகத்திக்கீரை – 2 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
துவரம்பருப்பு – 1/4 கப்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
பயத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2.
தாளிக்க
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் (தூள்)
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, வரமிளகாய் மூன்றையும் கழுவி நீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். அகத்திக் கீரையை உப்பு சேர்த்து அளவான நீர் விட்டு வேகவிட்டுத் தனியே வைக்கவும். ஊறிய பருப்புகளில் உள்ள நீரை வடிகட்டி உப்பு, மிளகாயுடன் கொரகொரப்பாக அரைத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, வெந்த அகத்திக்கீரை, பருப்பு சேர்த்து வதக்கவும். கீரையும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.