சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ பொக்காபூர் மாரியம்மன்
வனத்தை மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் பழங்குடிகளின் காவல் தெய்வமாக, காலங்காலமாகக் காத்து வரும் பொக்காபூர் மாரியம்மனை
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களானா கேரளா , கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல் மிக்க, ‘காடுறை தெய்வம்’ என்ற பெயரும் இந்த அம்மனுக்கு உண்டு.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வரும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த் திருவிழா மூன்று மாநில பக்தர்களின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 16- ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 – ம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அம்மன் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.