கரும்பு விவசாயி சின்னம் லக்கி இல்லை
கரும்பு விவசாயி சின்னம் உங்களுக்கு லக்கி இல்லை; அதனை மாற்றிவிடுங்கள்: டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. உங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல; பின்னர் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.