உலகம் அங்கீகரித்த மருந்தை கண்டுபிடித்த முதல் இந்தியர் – தமிழர்.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அங்கீகரித்த முதல் இந்திய மருந்து கண்டுபிடித்த தமிழர் Dr UP செந்தில்குமார் – எனது பல்கலைக்கழக தோழர், 35 ஆண்டு கால நண்பர், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைவர்.
உலகமெங்கும் ஏகப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்பாட்டில் இருந்தும்கூட, குணப்படுத்த முடியாத நுண்ணுயிர் AMR (Anti Microbial Resistance) தொற்றால் உலகமெங்கும் ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
2050ல் 1 கோடி உயிரிழப்புகள் ஏற்படும் என்று UN Environmental Report கணக்கிட்டு இருக்கிறது. AMR குறிப்பிடத்தக்க பொருளாதார செலவுகளையும் ஏற்படுத்துகிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, AMR ஆனது 2050 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் மருத்துவச் செலவுகளுக்கு வழிவகுக்கும்.
AMR-க்கு எதிரான பொருத்தமான உலகளாவிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், AMR-உந்துதல் இறப்புகள், உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த இறப்புகளில் <4% ஆகும், இது 2050 இல் சுமார் 40% ஆக உயரும்.
2030 ஆம் ஆண்டில், AMR குறைந்தபட்சம் $3.4 டிரில்லியன் வருடாந்திர பொருளாதார சேதத்திற்கு வழிவகுக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது; அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 24 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள்.
இதற்குக் காரணம், நோய்த்தொற்றை உருவாக்கும் பாக்டீரியா, நோயாளிகள் சாப்பிடும் ஆன்டிபயாட்டிக்கை தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்ளும் போது, அது AMR (Anti Microbial Resistance) உருவாகி, அதன் பின்பு எந்த ஆன்டிபயோட்டிக் உட்கொண்டாலும் செயலிழக்கச் செய்யும் வல்லமை பெற்று விடுவதுதான்.
அதாவது, பாக்டீரியாவை, வைரஸ், பூஞ்சை, ஒட்டுண்ணிகள் போன்றவை ஒழிக்க நாம் ஏவுகணை Anti Viral, anti bacterial, anti fungal, anti parasite drugs) வீசினால், ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் ஏவுகணைகளை (AMR) உருவாக்கி திருப்பி வீசுகின்றன அந்த பாக்டீரியாக்கள்.
ஆன்டிபயாடிக்கை அழிக்க வல்ல ஏவுகணை வேறொன்றுமில்லை… பீட்டா லேக்டமேஸ் (Beta lactamase) என்ற நொதிதான்.
இந்த நொதியைச் செயலிழக்கச் செய்யும் மருந்தை உருவாக்கினால், மனிதக் குலத்துக்குப் பேருதவியாக இருக்கும். இந்த மருந்தைக் கொண்டே பாக்டீரியாக்களை எளிதில் அழித்து விடலாம் என்பதை கண்டறிந்து அதை மருந்தாக உருவாக்கி ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்று பெயரிட்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் Dr. UP செந்தில்குமார்.
உலக அளவில் மொத்தம் 4,383 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு நோய்களைக் குணப்படுத்த இந்த மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், இவற்றில் ஒன்றுகூட இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
இந்த மாபெரும் மனக்குறையை இப்போது போக்கி, இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார்…
தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் Dr. UP செந்தில்குமார். இந்தியாவிலிருந்தபடி இவர் கண்டுபிடித்திருக்கும் ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்துக்கு இப்போது உலக அளவில் US FDA, EMA அங்கீகாரம் கிடைத்து விற்பனைக்கும் அனுமதிக்கப்படுகிறது.
இது இந்தியாவின் முதல் சாதனை, அதுவும் ஒரு தமிழர் செய்த சாதனை.
இந்த சாதனையை செய்தவர் என்னுடன் நான் M.SC (Applicable Mathematics & Computer Science) படிக்கும் போது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் Ph.D செய்தவர்.
அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைவர் அவர் தான். 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வேதியியல் துறையில் உருவாவதற்கு காரணமானவர்.
இந்த தமிழரின் சாதனையில் பெருமை கொள்கிறாம். அவரை அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.
வெ. பொன்ராஜ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் செந்தில்குமார். இந்தியாவிலிருந்தபடி இவர் கண்டுபிடித்திருக்கும் ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்துக்கு இப்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துவருகிறது. விற்பனைக்கும் அனுமதிக்கப்படுகிறது.