இன்றைய ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களே!
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு பேச்சினால் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில் நிதானம் தேவை.சில ருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தா பம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
ரிஷப ராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகை யில் சற்று அலைச்சலும் சோர்வும் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.
மிதுன ராசி அன்பர்களே!
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவு கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
கடக ராசி அன்பர்களே!
தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே!
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படவும்.
கன்னி ராசி அன்பர்களே!
புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
துலா ராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள்.
எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு ராசி அன்பர்களே!
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.
மகர ராசி அன்பர்களே!
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு தருவார். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் சற்று கவனம் தேவைப்படும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் அலைச்சலுடன், சில சங்கடங்களும் ஏற்படக்கூடும்
கும்பராசி அன்பர்களே!
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும்
மீனராசி அன்பர்களே!
வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு திடீர் பண வரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.