90 வயதாகிறது, தொடர்ச்சியாக என்னால் 18 பாடல்களைப் பாட முடியும்

பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே  எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள்,  சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஆஷா போஸ்லே தனது 90 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் வரும் மார்ச் 9 ஆம் தேதி பிரமாண்ட இசைநிகழ்ச்சி ஒன்றை  நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் அந்த இசைநிகழச்சி குறித்தும், தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறார். 

” நான் இன்னும் சிறிதுகாலம் வாழ்ந்தால் மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட எல்லா இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவேன். எனது இசை நிகழ்ச்சியின் பெயர் ‘Woh Phir Nahin Aati Hai’. மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமார் உள்ளிட்ட சில பாடகர்களின் இசை நிழச்சிகளை நாங்கள் பார்த்ததே இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.  ஆனால் நான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் ஆஷா போஸ்லேவின் இசை நிகழ்ச்சியை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று மக்கள் கூறுவார்கள். என்னுடைய ஊர் மும்பை. நான் சாலையில் நடந்ததையும், பேருந்தில் சென்றதையும் அந்த மும்பை பார்த்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published.