13-வது அமைச்சர்கள் மாநாடு உறுப்பினராக இந்தியா ஆதரவு
உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்றுள்ளார்
இரு தினங்களுக்கு முன் கடந்த 26-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே, முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் இணைந்தன. இந்த இரு நாடுகளும் இணைந்தது பற்றி குறிப்பிட்டு பேசிய கோயல், கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.