ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், 29 கோடி ரூபாய் செலவில் அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

துரை – அரசு இராஜாஜி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், 19,472.09 சதுரமீட்டர் பரப்பளவில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆறு தளங்களுடன், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் இருதய சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.