பாக். பிரதமர் பதவிக்கு பெயர் பரிந்துரை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ம் தேதி நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் தலைமையில் பிஎம்எல்-என் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவாஸ் தன் இளைய சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைந்தார்.