ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பல்கலைகழக பதிவாளர்
ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலு நடவடிக்கைக்கு ஆளாகமலேயே இன்று ஓய்வு பெறவுள்ளார். பெரியார் பல்கலைகழகத்தில் கணினி மென்பொருள் வாங்கியதில் ஊழல், பல்வேறு பொருட்கள் வாங்கியதில் ஊழல், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்க சலுகைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு என பதிவாளர் தங்கவேலு ஊழல் செய்தது நிறுபனம் ஆகியுள்ளது
ஆசிரியர் சங்கமும், தொழிலாளர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நேற்று காலை, மாலை என இருவேலையும் பல்கலைகழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் செய்த பதிவாளருக்கு துணை வேந்தர் துணை போவதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்
ஊழல் புகார் நிறுபனம் ஆன நிலையிலும் நடவடிக்கைக்கு ஆளாகாமலேயே இன்று ஓய்வு பெறவுள்ளார்