இன்றைய ராசிபலன்

மேஷம் ராசிபலன்

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணி களில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் அல்லது நண்பர் கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க் கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

ரிஷபம் ராசிபலன்

மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போல் நடை பெறும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம் ராசிபலன்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத் தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படக் கூடும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம் ராசிபலன்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

சிம்மம் ராசிபலன்

நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடி யும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் விற்பனை சுமார்தான். இன்று நீங்கள் அம்பிகையை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசிபலன்

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் கூடுத லாகக் கிடைக்கும். வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

துலாம் ராசிபலன்

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணை யால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செல வுகளால் சிலருக்குக். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். விநாயகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசிபலன்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்கு தாரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பைரவரை வழிபட முயற்சிகள் சாதகமாகும்.

Leave a Reply

Your email address will not be published.