அருள்மிகு கோனியம்மன் திருத்தோட்ட பவனி விழா
அருள்மிகு கோனியம்மன் திருத்தோட்ட பவனி விழா மிக மிக சிறப்பாக அலை கடலென திரண்ட மக்களின் வெள்ளத்தில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்துடன் நையாண்டி மேளத்துடன், இளைஞர்கள் இளைஞ்சிகள் மற்றும் சிறுவர்கள் சிறுமிகள் ஆனந்த நடனத்துடன் நகரின் நான்கு ரத வீதிகளிலும் மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்மனின் மனமும் மகிழ்ந்த இந்த தேரோட்ட நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது …
இதற்கான அனைத்து விதமான பாதுகாப்பும் ஒத்துழைப்பும் தந்த காவல்துறையின் செயல்பாடுகள் மிக மிக சிறப்பு மற்றும் கோவில் அறங்காவல் துறைக்கும் நிர்வாக குழுவினர்களுக்கும் அன்னதானம் , நீர்மோர் , குளிர்பானங்கள் , பழவகைகள் என பக்தர்களுக்கு வாரி வழங்கி விழாவை சிறப்பிக்க உறுதுணையாக இருந்த அனைவரையும் பாராட்டி மக்கள் தங்களின் பாராட்டுகளை அம்மனின் ஆசியுடன் தெரிவித்தார்கள் இதில் மக்களுடன் இணைந்து தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது…🙏
செய்திகள் கோவை பாலசுப்ரமணியன்