1 கைப்பிடி முருங்கைக் கீரை இருந்தால் போதும் இனி ஒரு நோயும் உங்களை நெருங்கவே நெருங்காது தெரியுமா

முருங்கைக்கீரை என்பது ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கி உள்ளது. முருங்கைக் கீரை மட்டும் அல்லாமல் முருங்கை மரம் முழுவதுமே ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் மகத்துவம் வாய்ந்த தன்மை உள்ளது. இதனால் தான் எல்லோருடைய வீடுகளிலும் பெரும்பாலும் இந்த மரம் சுலபமாக வளர்க்கப்பட்டு வந்தது, ஆனால் இன்று இவை குறைந்து வருவது கண்டு ஆச்சரியம் அளிக்கிறது. இத்தகைய முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய நற்குணங்களை கண்டால் நாம் வியந்து போகப் போகிறோம். வாருங்கள் முருங்கைக்கீரையின் வியத்தகு பயன்களை இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம். மனித உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களையும், குறிப்பாக இரும்பு சத்தை அதிகம் தன்னுள் கொண்டுள்ள இந்த முருங்கைக் கீரை, கீரை மட்டும் அல்லாமல் அதன் காம்பிலும் அத்தனை அமிர்தங்களையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலையில் எழுந்ததும் முதலில் வெறும் வயிற்றில் முருங்கை கீரை சாப்பிட்டால், ஏராளமான இரும்பு சத்து நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த ஓட்டம் சீரானாலே பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published.