பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன அர்த்தம்
கண் துடிப்பது என்பது மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணர்ந்திருப்பார்கள். இது ஒரு பொதுவான நிகழ்வு. கண் இமைகள் துடிப்பது என்பது நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமை சம்பந்தமான நிகழ்வுகளை குறிப்பதாக பலர் நம்புகின்றன.
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த நம்பிக்கை நமது நாட்டில் மட்டும் இன்றி உலகம் எங்கிலும் உள்ள மக்களும் இதனை நம்புகின்றனர்.
இது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மாறுபடுகின்றது. வலது கண் துடித்தால் குழந்தை பிறப்பை குறிக்கும் என்றும் இடது கண் துடித்தால் மரணத்தின் வருகையை குறிக்கும் என்றும் ஹவாய் பூர்வீக வாசிகள் நம்புகின்றனர்.
மற்றொரு புறம் சீனாவில் வலது கண் துடித்தால் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்றும் இடது கண் துடித்தால் அழிவை குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இருப்பிடம் இந்தியாவில் மற்ற நாடுகளைப் போன்று இல்லாமல் கண் துடிக்கும் இந்த நிகழ்வு அதிகமாகவே கவனிக்கப்படுகிறது. நம் நாட்டில் கண் துடித்தால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு நல்ல சகுனமோ கெட்ட சகுனமோ அது பாலின அடிப்படையில் கணிக்கப்படுகிறது.