பாலாற்றில் புதிதாக தடுப்பணை ஆ முறியடிக்க ஜி.கே.வாசன், ஓபிஎஸ் வலியுறுத்தல்
பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என த.மா.க தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் பாலாறு பகுதி பாலைவனமாகி விடும். பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வறண்ட நிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையைக் கட்ட முயற்சி எடுத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலித் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்காது. எனவே தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.