செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஐகோர்ட் இன்று தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன.

அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்

Leave a Reply

Your email address will not be published.