கேரளா ஸ்டைலில் சாம்பார் செய்வது எப்படி.?
வீட்டில் ஒரே மாதிரியான சுவையில் சாம்பார் வைக்காமல் கேரளா ஸ்டைலில் சாம்பார் வைத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- பட்ட மிளகாய்- 2
- கருவேப்பிலை- 1 கொத்து
- துவரம் பருப்பு- 1 கப்
- புளி கரைசல்- 1/2 டம்ளர்
- மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
- பெருங்காயம்- சிறிய துண்டு
- முருங்கைக்காய்- 1
- சின்ன வெங்காயம்- 10
- தக்காளி- 1
- கத்தரிக்காய்- 1
- உருளைக்கிழங்கு- 1
- உப்பு- தேவையான அளவு
மசாலா பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
- தேங்காய் துருவல்- 1 கைப்பிடி
- கருவேப்பிலை- 1 கொத்து
- பெரிய வெங்காயம்- 1
- தனியா- 2 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- பட்ட மிளகாய்- 8
- சீரகம்- 1 டீஸ்பூன்
- மிளகு- 1 டீஸ்பூன்
- வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
ஸ்டேப் -1
முதலில் மசாலா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும். இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
எண்ணெய் சூடானதும், தேங்காய் துருவல் மற்றும் வெங்காயத்தை தவிர மற்ற மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். பிறகு, அதில் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். அடுத்து இறுதியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
பிறகு, இதனை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இதில் கழுவி வைத்த துவரம்பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வேகவைத்து கொள்ளுங்கள்.
கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் செய்வது எப்படி..?
ஸ்டேப் – 5
துவரம் பருப்பு நன்றாக வெந்ததும், அதில் நறுக்கி வைத்த தக்காளி, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் – 6
காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்ததும், அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடுங்கள்.
ஸ்டேப் – 7
அடுத்து, ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, 2 பட்ட மிளகாய் மற்றும் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றினால் ருசியான கேரளா சாம்பார் தயார்.!