கண் திருஷ்டியை நீக்கும் படிகார கல் பரிகாரம்
கல் அடி பட்டாலும் பரவாயில்ல, ஆனால் கண்ணடி படக்கூடாது என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் கண் திருஷ்டி பட்ட வீடு, நிச்சயம் சந்தோஷமாக இருக்காது. உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்கி இருக்கும் கண் திருஷ்டியை விரட்டியடிக்க, அதிகமாக செலவு இல்லாத சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய படிகார கல் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியை கண்ணுக்கே தெரியாமல் அடித்து விரட்டி விடலாம். அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் செய்து வந்த எளிமையான பரிகார முறைகளில் இதுவும் ஒன்று.
கண் திருஷ்டி நீக்கும் படிகார கல் பரிகாரம் அந்த காலம் மட்டுமல்ல இந்த காலத்திலும் நிறைய பேர் வீடுகளில் இந்த படிகார கல் நிலை வாசல் படியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று இருப்பவர்களுக்கும் இந்த படிகார கல்லின் மகத்துவம் தெரிந்திருக்கிறது. இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும் அந்த படிகாரக் கல்லை வைத்து முறையாக வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியை முழுமையாக விரட்டி அடிக்க கூடிய ஒரு பரிகாரத்தை இப்போது பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை இரவு, ஞாயிற்றுக்கிழமை இரவு, அமாவாசை இரவு, இந்த மூன்று நாட்களில் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒரே ஒரு படிகாரக் கல்லை எடுத்து வலது பக்கம் 9 முறை, இடது பக்கம் 9 முறை சுற்ற வேண்டும். உங்களுக்கு நீங்களே சுற்றிக் கொண்டாலும் தவறு கிடையாது.