50 கிலோமீட்டர் சுற்றி தான் போகணும்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து தமிழக கேரள பகுதிகளை இணைக்கும் சாலையாக கம்பம் மெட்டு மலைச்சாலை அமைந்துள்ளது, இச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள்உள்ளது, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைச்சாலையில் நாள் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஏலத் தோட்ட தொழிலாளர்கள் இந்த மலைச்சாலை வழியாக கேரளா சென்று வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மூணாறு, நெடுங்கண்டம், கட்டப்பனை ஆகிய பகுதிகளுக்கு தமிழக மற்றும் கேரள அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்றாடம் சென்று வருகின்றது.
மேலும் கனரக வாகனங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் விவசாய காய்கறி பொருட்களை கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள இருப்பதால் பிப்ரவரி 24ம் தேதி முதல் 10 நாட்களுக்கு கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் கேரளா மாநில இணைப்பு நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் மாநில நெடுஞ்சாலை துறையினர் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளனர்