ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம்.
சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தென்னக ரயில்வேயில் கொரோனா காலத்திற்கு முன்பு பயணிகள் ரயிலில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் கூட்டத்தை குறைக்க பயணிகள் ரயில் சிறப்பு விரைவு ரயில் என அறிவிக்கப்பட்டு, 2 மடங்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், சாதாரண பயணிகள் ரயில்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது